ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களா..? பெரிய ஸ்டேஷன்களுக்கு அடிக்கடி செல்வீர்களா..? ஆனால் இனிமேல் உங்கள் ரயில் டிக்கெட் விலை உயரும். ரயில் நிலையங்களின் மேம்பாட்டு கட்டணத்தை பயணிகளிடம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் 50-க்கும் அதிகமான முக்கிய ரயில் நிலையங்களை தனியார் மற்றும் பொது பங்களிப்புடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால், ரயில்களில் டிக்கெட் விலை உயரும். சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். அவர்களிடமிருந்து மேம்பாட்டு வரியின் கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம் என்ற பெயரில் பயணிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணம் ரூ.10 முதல் ரூ.50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இந்த கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விலையும் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. அந்தந்த நிலையங்களில்
நவீனமயமாக்கல் முடிந்ததும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்டேஷன் டெவலப்மென்ட் கட்டணங்கள் மூன்று வகைப்படும். ஏசி வகுப்பு பயணிகளுக்கு ரூ.50, ஸ்லீப்பர் வகுப்பில் ரூ.25 மற்றும் முன்பதிவு செய்யப்படாத வகுப்பில் ரூ.10 வசூலிக்கப்படும்.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…