பயணிகளிடம் ரயில் நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்க ரயில்வே முடிவு..!

Default Image

ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்கள் ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களா..? பெரிய ஸ்டேஷன்களுக்கு அடிக்கடி செல்வீர்களா..? ஆனால் இனிமேல் உங்கள் ரயில் டிக்கெட் விலை உயரும்.  ரயில் நிலையங்களின் மேம்பாட்டு கட்டணத்தை பயணிகளிடம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் 50-க்கும் அதிகமான முக்கிய ரயில் நிலையங்களை தனியார் மற்றும் பொது பங்களிப்புடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால், ரயில்களில் டிக்கெட் விலை உயரும். சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். அவர்களிடமிருந்து மேம்பாட்டு வரியின் கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம் என்ற பெயரில் பயணிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணம்  ரூ.10 முதல் ரூ.50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இந்த கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விலையும் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. அந்தந்த நிலையங்களில்
நவீனமயமாக்கல் முடிந்ததும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்டேஷன் டெவலப்மென்ட் கட்டணங்கள் மூன்று வகைப்படும். ஏசி வகுப்பு பயணிகளுக்கு ரூ.50, ஸ்லீப்பர் வகுப்பில் ரூ.25 மற்றும் முன்பதிவு செய்யப்படாத வகுப்பில் ரூ.10 வசூலிக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்