இந்தியாவில் சில வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை 80 சதவீதம் (அதாவது 130 கி.மீ.) ஆக அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் தலைமையில், பயணிகள் ரயில்களின் வேகத்தினை அதிகரிப்பது குறித்து இந்திய ரயில்வே தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2021, மார்ச் மாதத்திற்கும் 10,000 கி.மீ பயணம் மேற்கொள்ளும் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ ஆக அதிகரிக்கும் முயற்சிகள் நடந்துக்கொண்டே வருகிறது.
அதில், கோல்டன் குவாடிலேட்ரல் மற்றும் டயக்னல் க்ராஸ்ஸிங் (Golden Quadrilateral / Diagonals) 9,893 கி.மீ பாதையை கொண்டுள்ளது. அவ்வழியாக செல்லும் ரயில்கள், மணிக்கு 130 கிமீ வேகத்தை மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
1,442 வழித்தடங்களில் இயங்கும் ரயில்களின் வேகம், மணிக்கு 130 கி.மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வழியில், கோல்டன் குவாடிலேட்ரல் மற்றும் டயக்னல் க்ராஸ்ஸிங் பாதைகளில் செல்லும் 15% ரயில்களின் வேகமும், மணிக்கு 130 கிலோமீட்டராக உயர்த்தப்படவுள்ளது.
சமீபத்தில், தென் மத்திய ரயில்வேயின் கீழ் சென்னை-மும்பை வழித்தடத்தில் 130 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க வெற்றிகரமான சோதனை நடந்தது. இந்த வேகத்தில் ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்கள் மட்டுமே இயங்குகிறது. அந்த பாதை, ஆந்திர பிரதேஷ் மாநிலம், அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டக்கல் பிரிவுக்கு சொந்தமானதாகும்.
இந்த வழியில், ரயிலின் வேகம் 80% க்கும் அதிகமான வேகம் அதாவது மணிக்கு 130 கிலோமீட்டராக இருந்தது. இந்த பாதை கோல்டன் குவாடிலேட்ரலின் கீழ் வருகிறது. இது சென்னை-மும்பை, டெல்லி-கொல்கத்தா-சென்னை வரை உள்ளது.
இந்த முழு பாதையின் நீளம் 9,893 கி.மீ. ஆகும். இந்த முழு பாதையின் வேகத்தையும், மணிக்கு 130 கிலோமீட்டராக அதிகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…