ரயில் பயணிகளே.. “இந்த வழித்தடங்களில் 130 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்”- ரயில்வே அதிரடி!

Default Image

இந்தியாவில் சில வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை 80 சதவீதம் (அதாவது 130 கி.மீ.) ஆக அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் தலைமையில், பயணிகள் ரயில்களின் வேகத்தினை அதிகரிப்பது குறித்து இந்திய ரயில்வே தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2021, மார்ச் மாதத்திற்கும் 10,000 கி.மீ பயணம் மேற்கொள்ளும் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ ஆக அதிகரிக்கும் முயற்சிகள் நடந்துக்கொண்டே வருகிறது.

அதில், கோல்டன் குவாடிலேட்ரல் மற்றும் டயக்னல் க்ராஸ்ஸிங் (Golden Quadrilateral / Diagonals) 9,893 கி.மீ பாதையை கொண்டுள்ளது. அவ்வழியாக செல்லும் ரயில்கள், மணிக்கு 130 கிமீ வேகத்தை மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

1,442 வழித்தடங்களில் இயங்கும் ரயில்களின் வேகம், மணிக்கு 130 கி.மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வழியில், கோல்டன் குவாடிலேட்ரல் மற்றும் டயக்னல் க்ராஸ்ஸிங் பாதைகளில் செல்லும் 15% ரயில்களின் வேகமும், மணிக்கு 130 கிலோமீட்டராக உயர்த்தப்படவுள்ளது.

சமீபத்தில், தென் மத்திய ரயில்வேயின் கீழ் சென்னை-மும்பை வழித்தடத்தில் 130 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க வெற்றிகரமான சோதனை நடந்தது. இந்த வேகத்தில்  ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்கள் மட்டுமே இயங்குகிறது. அந்த பாதை, ஆந்திர பிரதேஷ் மாநிலம், அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டக்கல் பிரிவுக்கு சொந்தமானதாகும்.

இந்த வழியில், ரயிலின் வேகம் 80% க்கும் அதிகமான வேகம் அதாவது மணிக்கு 130 கிலோமீட்டராக இருந்தது. இந்த பாதை கோல்டன் குவாடிலேட்ரலின் கீழ் வருகிறது. இது சென்னை-மும்பை, டெல்லி-கொல்கத்தா-சென்னை வரை உள்ளது.

இந்த முழு பாதையின் நீளம் 9,893 கி.மீ. ஆகும். இந்த முழு பாதையின் வேகத்தையும், மணிக்கு 130 கிலோமீட்டராக அதிகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்