நிவாரண பொருட்களை எடுத்து செல்ல கட்டணம் கிடையாது ரயில்வே அறிவிப்பு
கடந்த சில வாரங்களாக கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. இதில் பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன, பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையை கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்ல கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வாரிய வணிகப் போக்குவரத்து துணை இயக்குனர் மகேந்திரன் சிங் கூறுகையில், வெள்ளம் பாதித்த கேரளா ,கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு நிவாரண பொருட்களை சரக்கு ரயிலில் அனுப்ப கட்டணம் வசூலிக்கமாட்டோம் . அதேபோல் நிவாரண பொருட்களை அனுப்புவோர் அல்லது பெறுபவர் மாவட்ட ஆட்சியர் அல்லது துணை கமிஷனராக இருக்கவேண்டும் எனவும் கூறினார்.