100 நாட்களில் நாடுமுழுவதும் உள்ள 2,568 ரயில்வே கேட்டுகளை மூட ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு !

Default Image

இந்திய ரயில்வே கேட்டுக்களை அகற்றும் மத்திய அரசின் முடிவை கேட் கீப்பர் மட்டும் என்ஜினீயரிங் தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர்.
இந்திய ரயில்வே தனியார் மயமாக்கும் பணியை 100 நாள்களில் செயல்ப்படுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. இந்த 100 நாட்களில் ரயில் தனியார் மயம் ,ஊழியர் குறைப்பு ,ஆகிய திட்டங்களை செயல்படுத்த உள்ளனர்.இந்த திட்டத்தில் ரயில்வே கேட்டுகளை முற்றிலும் நீக்குவதாக கூறப்பட்டு உள்ளது.

இதனால் கேட் கீப்பர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஒரு புறம் ஆல் இல்லாத  ரயில்வே கேட்டுகளில் கேட் மித்ராக்கள் என கூறப்படும் தனி நபரை வேலையில் அமர்த்தி வருகின்றனர்.
ஆனால் கேட் கீப்பர் உள்ள  ரயில்வே  கேட்டுகளை ரயில்வே அமைச்சகம் மூட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.ரயில்வே மேம்பாலம் ,சுரங்கப்பாதை கட்டுவதால் கேட் கீப்பர் தேவை இல்லை என கூறுகின்றனர்.
இந்நிலையில் 100 நாட்களில் நாடுமுழுவதும் உள்ள 2,568 கேட்டுகளை மூட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.ரயில்வே என்ஜினீயரிங் பிரிவில் ரயில்வே பராமரிப்பு பணி தொடர்புடைய கேட் கீப்பர் ,டிராக் மேன் ஆகிய 7 பணியிடங்கள் உள்ளது.

ரயில்வே அமைச்சகம் அறிவிப்பால் இவர்கள் அனைவரும் தங்களது பணியை இழக்க வாய்ப்பு உள்ளது.மதுரை ரயில்வே கோட்டத்தில் என்ஜினீயரிங் பிரிவில் தண்டவாள பராமரிப்பு பணியில் கடந்த 1990-ம் ஆண்டு 6,700 பணியாளர்கள் வேலை செய்து வந்தனர்.ஆனால் தற்போது 2,935 பணியாளர்கள் மட்டுமே வேலை செய்து வருகின்றனர்.
அன்று இயக்கப்பட்ட ரயில்களின் எண்ணிக்கையை விட இன்று ரயில்களின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்து உள்ளது. அன்றைய காட்டியும் இன்று இரட்டிப்பாக வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைந்து உள்ளது.

இந்நிலையில்  தற்போது இருக்கின்ற அந்த குறைந்த  பணியாளர்களையும் வேலையை  இழக்கும் நிலைமை வந்து உள்ளது.ஆகவே இந்த திட்டத்திற்கு என்ஜினீயரிங் பிரிவு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்