ரெயில்வே துறை.! குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ரூ.88 கோடி இழப்பு.!

Default Image
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது இந்திய ரெயில்வே துறைக்கு ரூ.88 கோடிக்கு பொருள்கள் சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளது.
  • அதில் கிழக்கு மண்டலத்தில் ரூ.72 கோடி, தென்கிழக்கு மண்டலத்தில்  ரூ.13 கோடி மற்றும் வடகிழக்கு மண்டலத்தில் ரெயில்வேவிற்கு ரூ.3 கோடி அளவில் சேதம் அடைந்து உள்ளது  

மத்திய அரசு இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.இதை தொடர்ந்து  நாடு முழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. அதிலும் அசாம், திரிபுரா மற்றும் மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்  தீவிரம் அடைந்து உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.இதனால் வடகிழக்கு டெல்லி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகளிலும்144 தடை உத்தரவு உள்ளது.

இந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பல மாநிலங்களில் ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது இந்திய ரெயில்வே துறைக்கு கோடிகணக்கில் பொருள்கள் சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டதாக இந்திய ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இந்த போராட்டத்தின் போது இந்திய ரெயில்வே துறைக்கு ரூ.88 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

அதில் கிழக்கு மண்டலத்தில் ரூ.72 கோடி, தென்கிழக்கு மண்டலத்தில்  ரூ.13 கோடி மற்றும் வடகிழக்கு மண்டலத்தில் ரூ.3 கோடி அளவில் சொத்துகள் சேதம் அடைந்து உள்ளது  என இந்திய ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்