ரயில் பயணம் குறித்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ரயில்வே துறை!
ரயில் பயணம் குறித்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ரயில்வே துறை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 4-ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் ஜூன் 1-ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு ஓரளவுக்கு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்ப்பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அத்தியாவசிய காரணமின்றி ரயில் பயனதாய் மேற்கொள்ள வேண்டாம் என ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.