நள்ளிரவு 12 மணி வரை நீண்ட மக்களவை! கடந்த 18 ஆண்டுகளில் இதுவே அதிகம்!
நேற்று முன்தினம் மக்களவையில் ரயில்வே பட்ஜெட் துறை சார்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் இரவு 11.55 வரை சென்றதாம். கடந்த 18 ஆண்டுகளில் இவ்வளவு நேரம் விவாதம் நடந்தது இதுவே அதிகம் என மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் திமுக எம்பி கனிமொழி, மேலும் 100 அமைச்சர்கள் இந்த விவாதத்தில் பேசினர். இதில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர், ‘ ரயில்வே துறையை அரசி தனியார் மயமாக முயற்சித்து வருவதாகவும், பபுல்லட் ரயில் போன்று மக்களிடம் வெறும் கனவுகளை விற்பனை செய்து வர்வதாகவும் பொதுவான கருத்துக்களை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர்.
இதற்க்கு பதிலளித்த பாஜக எம்பி. ‘ காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட தற்போது ரயில்வே துறை அதிகமாக முன்னேறியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் ரயில்வே விபத்துகள் 73 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறினார். வாஜ்பாய் அமைத்து கொடுத்த பாதையில் மோடி வந்தபின் ரயில்வே துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.’
இதில் ஒரு மத்திய அமைச்சர் இதுவரை 18 ஆண்டுகளில் இவ்வளவு நேரம் ரயில்வே பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது இதுவே அதிக நேரம் என குறிப்பிட்டார்.