ரயில்வே பட்ஜெட்: இடைக்கால பட்ஜெட் தாக்கலில் ரயில்வே துறைக்கு ரூ .65,000 கோடி ஒதுக்கீடு
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே துறைக்கான நிதி பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில்,கடந்த சில வருடங்களாக மொத்த பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்படுகிறது.இந்த பட்ஜெட்டினை மத்திய ரயில்வே துறை அமைச்சர் தாக்கல் செய்வார்.
2019- 2020 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கலில் ரயில்வே துறைக்கு 65,000 கோடி ரூபாயானது ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் ரயில்வே துறைக்கான ஆண்டு வருமானம் 6 லட்சம் கோடியிலிருந்து 12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்திருந்தார்..
இந்நிலையில், மீண்டும் புதிதாக பதவியேற்ற மத்திய அரசின் பட்ஜெட்டானது நடைபெறும் மக்களவைக் கூட்டத்தில் ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.