ரயில்வே பட்ஜெட் ஆரம்ப காலத்தில் ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் பிரிக்கப்படாமல் ஒன்றாக இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் பட்ஜெட்டில் இருக்கும் குறைகளை சரி செய்வதற்கு வில்லியம் அக்வோர்த் கமிட்டி ஒரு குழுவை அமைத்தனர்.
அக்குழு 1921 ஆம் ஆண்டு ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என கூற பிறகு ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட்டாக மாற்றப்பட்டது.பிறகு 2017-ம் ஆண்டு 93 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பொது பட்ஜெட்டில் ரயில்வே பட்ஜெட் இணைந்தது.
ரயில்வே பட்ஜெட் அறிவிப்பின் போது ரயில் சேவைகள் பற்றியும் , புதிய ரயில்கள் இயக்குவதை பற்றியும் அறிவிக்கப்படும்.மேலும் ரயில் சேவையின் போது ஏற்படும் செலவுகள், வருமானம் போன்ற அனைத்தும் தகவலையும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்தார்.அதில் 2019- 2020 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 65,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் ரயில்வே துறையில் ஆண்டு வருமானம் 6 லட்சம் கோடியிலிருந்து 12 லட்சம் கோடி உயர்ந்து உள்ளதாக கூறினார்.ஆள் இல்லா ரயில்வே கிராசிங் முறை ஒழிக்கப்படும் எனவும் பல பகுதிகளில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு ரயில் போக்குவரத்து அதிகரிப்பதாகவும் கூறினார்.
மேலும் மேகாலயா, மிசோரம், திரிபுரா மாநிலங்கள் ரயில்வே வரைபடத்தில் இணைக்கப்படும் எனவும் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் டெல்லி முதல் வாரணாசி வரை இயக்கப்படும் என பியூஷ் கோயல் இடைக்கால மத்திய பட்ஜெட்டில் தெரிவித்தார்.
மக்கள் எதிர்பார்ப்பு :
தென் மாவட்ட மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக தற்போது இருப்பது மதுரை ,வஞ்சி மணியாச்சி , தூத்துக்குடி , நாகர்கோவில், திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் இரட்டை ரயில் பாதை அமைப்பத்திற்காக 540 கோடி ஒதிக்கியதாக செய்தி வெளியானது. ஆனால் அந்த வழித்தடங்களில் எந்த பணியும் இன்னும் தொடங்கப்படவில்லை.
2014 -2015 ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட் அறிவிக்கும் போது கன்னியாகுமரியில் இருந்து அதிநவீன ரயில் முனையம் அமைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் இன்னும் அறிவிப்போடு மட்டுமே உள்ளது.
மேலும் தென் தமிழகத்தில் அதிக அளவில் ரயில்கள் இயக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரயில் வாரத்தில் ஒருமுறை வியாழக்கிழமை மட்டுமே வந்து செல்கிறது.இதனால் கல்வி , வேலை , சுற்றுலா , தொழில் சம்பந்தமாக சென்னைக்கு செல்வதற்கும்,போகுவதற்க்கும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த ரயில் தினசரி இயக்க வேண்டும். அல்லது வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாள் அதாவது வியாழன் ,வெள்ளி, சனி இயக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…