ரெயில்வே பட்ஜெட் பற்றிய கருத்துக்கள்!
ரெயில்வே பட்ஜெட் என்பது இந்தியாவின் இரும்புப்பாதை போக்குவரத்தை கையாளும், இந்திய இரும்பூர்த்தித்துறையின் வருடாந்திர நிதி நிலை அறிக்கை ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும், இந்திய இரும்புவழி அமைச்சகத்தின் சார்பில் இரும்புவழி அமைச்சரால் தாக்கல் செய்யப்படும்.
24, மார்ச், 1924-ஆம் ஆண்டு இரும்புவழி நிதியறிக்கை தாக்கல் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை இரும்புவலி அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் தொடர்ச்சியாக ஆறுமுறை இரும்புவலி நிதியறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்.
முதல் பெண் இரும்புவழி அமைச்சராக , 2000-ஆவது ஆண்டில் மம்தா பானர்ஜி அவர்கள் பதவியேற்றார். இவர் இரும்புவழி நிதியறிக்கையை தாக்கல் செய்த போது, இரு வேறு மத்திய அரசு கூட்டணியில் அங்கம் வகித்த ஒரே பெண் இரும்புவழி அமைச்சர் என்ற பெருமையை பெற்றார். தற்போது இந்திய இரும்புவழி அமைச்சராக பியூஸ் கோயல் பதவி வகிக்கிறார்.