ரயில்பெட்டி கொரோனா வார்டில் ஆகிசிஜன் சிலிண்டர்கள், உயிர் கழிப்பறைகள்.! வெப்பத்தை சமாளிக்க என்ன நடவடிக்கைகள்.!?

Published by
மணிகண்டன்

ரயில்வேயின் கொரோனா சிறப்பு வார்டு பெட்டிக்குள் ஆக்சிஜன் சிலிண்டர், உயிர் கழிப்பறைகள் ஆகியவை உள்ளன. ஆனால், அப்பெட்டிக்குள் ஊடுருவும் வெப்பத்தை குறைக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என முயற்சித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருவதால் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அனைத்து நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்த வேண்டியவர்களுக்கும் மருத்துவமனைகளில் இடவசதி பற்றாக்குறை காரணமாக ரயில் பெட்டிகளை கொரோனா சிறப்பு வாறுகளாக மாற்றி வருகின்றன.

இந்த கொரோனா சிறப்பு வார்டு பெட்டிக்குள் ஆக்சிஜன் சிலிண்டர், பவர் சாக்கெட்டுகள், உயிர் கழிவு (மருத்துவ கழிவு) கழிப்பறைகள், கொசுவலை, கைகழுவும் இடம் போன்ற பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், ரயில் பெட்டிகள் உலோகத்தால் ஆனது என்பதாலும் ஆக்சிஜன் சிலிண்டர், பயோ டாய்லட் (உயிர்கழிவு கழிப்பறைகள்) எவ்வாறு கையாள்வது என ரயில்வே மற்றும் மருத்துவ நிர்வாகம் திணறி வருகிறது. இதற்க்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.

இதுவரையில் 5321 ரயில் பெட்டிகள் கொரோனா சிறப்பு வாருட்களாக மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு வார்டுகளில் முதல் நிலை நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

மேலும், கூடுதலாக 960 ரயில்பெட்டி சிறப்பு கொரோனா வார்டுகள் ஐந்து மாநிலங்களில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் 503 ரயில்பெட்டி கொரோனா வார்டுகளும், உத்தரபிரதேசத்தில் 372 சிறப்பு வார்டுகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு வார்டுகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால் அதனை இதுவரை யாரும் பயன்படுத்தவில்லை. அந்த ரயில்வே சிறப்பு வார்டுகளில் மருத்துவ ஊழியர்கள் ஓய்வு எடுப்பதற்கு இரண்டு, மூன்று குளிரூட்டப்பட்ட அறைகள் மட்டுமே உள்ளனவாம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

11 minutes ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

54 minutes ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

1 hour ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

2 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

2 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

2 hours ago