இந்த பட்ஜெட்டில் இரயில்வே..கடந்த ஒதுக்கீடு..இந்த ஆண்டுக்கான எதிர்பார்ப்பு குறித்த சிறப்பு அலசல்…

Default Image
  • இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமையன்று நடப்பு ஆ ணடான 2020-21ம் ஆண்டுக்கான  பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
  • இந்தியாவை பொறுத்தவரை பட்ஜெட் என்பது வெறும் நிதி நிலை அறிக்கை அல்ல.

அதன் பின் மிகப்பெரிய  வரலாறே உள்ளது. அதிலும் தனி பட்ஜெட்டாக இருந்த ரயில்வே பட்ஜெட், தற்போது பொது பட்ஜெட்டுடன் இனைக்கப்பட்டுள்ள பல நிகழ்வுகள் நடந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த சிறப்பு பார்வை.

Image result for railway rush

கடந்த  2017 ஆம் ஆண்டு வரை ரயில்வே பட்ஜெட்டையும் பொது பட்ஜெட்டையும் தனித்தனியாக தாக்கல் செய்த 92 ஆண்டுகால பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டு  வந்தது ஆளும் பாஜக அரசு. முன்னர், பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட்டை ஆகிய  இரண்டையும் ஒன்றாக தாக்கல் செய்தவர் முன்னாள் நிதியமைச்சர், மறைந்த, அருண் ஜெட்லி ஆவார். இவர் கடந்த  2017ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்த புதிய வகையில் இரு பட்ஜெட்டையும் இணைத்து  பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 

Image result for railway rush

இதற்க்கு முன்னதாக, இரு பட்ஜெட்டுமே, தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட்டன. ரயில்வே, பட்ஜெட் கடைசியாக 25 பிப்ரவரி 2016 அன்று தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. இதேபோல், சென்ற 2019ம்  ஆண்டுக்கான  பட்ஜெட்டில், ரயில்வே நிதி  ஒதுக்கீடு  மேலும் அதிகரித்து அதிகபட்சமாக ரூ 1.6 லட்சம் கோடியை எட்டியது. இந்த பட்ஜெட் அனைத்து மக்களுக்கும் ரயில் பயணத்தை வசதியாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தியது, எனவே பயணிகள் வசதிகள் குறித்து  இந்த பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

Related image

ரயில்வேயை முழுவதுமாக மின்மயமாக்கிய உலகின் முதல் நாடாக இந்தியா மாறிவிட்டது. ஜப்பான் நாட்டின் உதவியுடன்  அகமதாபாத் முதல் மும்பை வரை இயங்கப்போகும் முதல் அதிவேக புல்லட் ரயிலையும் இந்தியா அறிமுகம் செய்யதது. இந்த 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், ரயில்வேக்கு எந்த அளவுக்கு பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது, புதிய திட்டங்கள் குறித்து நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்