அடுத்த 21 நாட்களுக்கு ரயில், விமானம், மெட்ரோ உள்ளிட்ட சேவைகள் இயங்காது.!
அடுத்த 21 நாட்களுக்கு விமானம், ரயில், மெட்ரோ மற்றும் இன்டர்ஸ்டேட் போன்ற சேவைகளுக்கு தடை தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு, மேலும் 2 வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, பொது முடக்கத்தை மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பின்னர் சிவப்பு, ஆரஞ்சி மற்றும் பச்சை போன்ற 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு அதற்கேற்ப தளர்வு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த 21 நாட்களுக்கு விமானம், ரயில், மெட்ரோ மற்றும் இன்டர்ஸ்டேட் போன்ற சேவைகளுக்கு தடை தொடரும் என்றும் நாடு முழுவதும் பள்ளி, கல்லுரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்காது எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஹோட்டல், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், தியேட்டர்கள், ஜிம்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு ஏற்கனவே உள்ள தடை தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.