உத்திரபிரதேசத்தில் ரவுடிகள் கொலை..! அகமது சகோதரர்களின் வழக்கறிஞர் பகீர் குற்றசாட்டு..!
அகமது அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அகமது சகோதரர்களின் வழக்கறிஞர் விஜய் மிஸ்ரா பகீர் குற்றசாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், அத்திக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
வழக்கறிஞர் விஜய் மிஸ்ரா பகீர் குற்றசாட்டு
இந்த நிலையில், அகமது சகோதரர்களின் வழக்கறிஞர் விஜய் மிஸ்ரா பகீர் குற்றசாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், பிரயாக்ராஜில் இருந்து பரேலிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அஷ்ரஃப்பிடம் இந்த முறை நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள், ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த 15 நாட்களுக்குள் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் அவரிடம் கூறியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இந்த மிரட்டல் மூத்த அதிகாரி ஒருவரால் கொடுக்கப்பட்டது. அவரது பெயரை என்னால் கூற முடியாது, ஆனால் நான் கொல்லப்பட்டால், ஆவணங்கள் முதல்வர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அலகாபாத் தலைமை நீதிபதி ஆகியோருக்கு சென்றடையும், அதில் அவரது பெயர் இருக்கும் என அஷ்ரப் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
லவ்லேஷ் திவாரி அருண் மவுரியா மற்றும் சன்னி அதிக் அகமது கொலையாளிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதாப்கர் சிறைக்கு மாற்றப்பட்டனர்.