” ஒரு நாளைக்கு 1 ரூபாய் ” விவசாயிகளுக்கு அவமானம்…ராகுல் விமர்சனம்…!!
விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு 17 ரூபாய் ஒதுக்கியது ஒரு அவமானம் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இடைக்கால பட்ஜெட்_டில் 2 ஹெக்டருக்கு குறைவான நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இது 3 தவணைகளாக விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தகூறுகையில் மத்திய அரசு பட்ஜெட்டின் படி பார்த்தால் இந்த தொகை நாள் ஒன்றுக்கு 17 ரூபாய் என்று வழங்கப்படுகின்றது.இது விவசாயிகளை அவமானம் செய்யும் செயல் என்றும் விமர்சித்துள்ளார்.