அமேதி தொகுதியில் தானும் தனது கட்சியும் ஏதும் செய்யாததால் அந்த தொகுதி மக்கள் தோல்வியை பரிசாக தருவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பயம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக தேசியத்தலைவர் அமித் சா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே தேர்தலையொட்டி நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,கேரள காங்கிரஸ் கமிட்டியின் கோரிக்கையை ஏற்று, கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்று ஏ.கே.அந்தோணி கூறினார்.
இதனால் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதியாகி இருந்தது.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திர பிரதேச மாநிலம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.மேலும் தமிழகத்தில் விருப்பமனு அளிக்கப்பட்டது.அதேபோல இதற்கு தமிழகத்தில் போட்டியிட தமிழக காங்கிரஸ் கமிட்டி கே.எஸ்.அழகிரியும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து பாஜக தேசியத்தலைவர் அமித் சா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கடந்த பல ஆண்டுகளாக அமேதி தொகுதியில் தானும் தனது கட்சியும் ஏதும் செய்யாததால் அந்த தொகுதி மக்கள் தோல்வியை பரிசாக தருவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பயம் ஏற்பட்டுள்ளது.அந்த பயம்தான் கேரளாவில் உள்ள வயநாட்டில் போட்டியிடுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…