அங்க உனக்கு மரியாதை கிடைக்காது..கொள்கையை மறந்துவிட்டாய்..கொட்டி தீர்த்த ராகுல்

அரசியல் எதிர்காலம் குறித்த சந்தேகத்த்தின் காரணமாக தனது கொள்கையை ஜோதிராதித்யா சிந்தியா மறந்து விட்டார்,என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் ஜோதிராதித்யா சிந்தியா சொல்வதற்கும், அவருடைய மனதில் உள்ளதற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது. சிந்தியா எனது பழைய நண்பர். அவருக்கு அரசியல் எதிர்காலம் குறித்த அச்சம் மற்றும் சந்தேகத்தால், தனது கொள்கையை மறந்துவிட்டார். பா.ஜக கட்சியில் சிந்தியாவுக்கு எந்த மரியாதையும் கிடைக்காது, திருப்தியும் ஏற்படாது. என்று கூறிய ராகுல் பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மோடி அரசால் நாட்டின் பொருளாதாரம் நாசமடைந்து விட்டது. இது எல்லாம் சுனாமியின் ஆரம்பம்தான். பொருளாதார நிலையை இன்னும் மோசமாக போகும். பொருளாதாரம் பற்றி பிரதமர் மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனக்கோ பொருளாதாரம் புரியவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை, கொரோனா வைரஸ் மிக மோசமாக பாதித்துக் கொண்டிருக்கிறது. அரசினுடைய நடவடிக்கை ஏற்கனவே தாமதமாக உள்ள நிலையில் வைரஸ் பாதிப்பை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025