காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மே 31 ஆம் தேதி 10 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் என தகவல்.
காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி யுமான ராகுல் காந்தி, வரும் மே 31இல் அமெரிக்காவிற்கு 10 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி ஜூன் 22இல் அதிகாரபூர்வ அரசு முறைப்பயணமாக அமெரிக்கா செல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் தனது பயணத்தில் ஜூன் 4ஆம் தேதி நியூயார்க் நகரின் மாடிஸன் சதுர பூங்காவில் உள்ள 5000 என்.ஆர்.ஐ க்களுடன் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் கலந்துரையாடல் மற்றும் உரையாற்றவும் இருக்கிறார்.
மேலும் அரசியல்வாதிகள் மற்றும் தொழில்முனைவோரையும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச்சில் ராகுல் காந்தி, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசியது சர்ச்சைக்குள்ளானது மற்றும் ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…