டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் , தேர்தல்களில் வாக்குப் பதிவு எந்திரத்திற்கு பதில் மீண்டும் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் 84ஆவது முழு அளவிலான இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மற்றும் மாநில தலைவர்கள், காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இம்முறை, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். ராகுல் காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முழு அளவிலான இந்த மாநாட்டில், அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல், அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதற்காக, தங்கள் கருத்தோடு ஒத்துப்போகும் கட்சிகளோடு, நல்லுறவை ஏற்படுத்தி, ஒருங்கிணைந்து செயல்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரே சமயத்தில், நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது என்ற மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது என்றும், இனிவரும் தேர்தல்களில், வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக, வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, மத்திய பாஜக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…