அப்போ 15 இலட்சம்…இப்போ 3.60 இலட்சம்…. பணத்தை கண்ணில் காட்டி ஏழை மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளோ?…கிசுகிசுக்கும் கிராம மக்கள்….
இந்தியாவில் தேர்தல் திருவிழா தற்போது நடைபெற்றுவரும் நிலையில்,மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகளில் 5 கட்டங்கள் தற்போது வரை நிறைவடைந்ததுள்ளது.எஞ்சிய இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே நடைபெறவுள்ளன.அந்த 6 மற்றும் 7-ம் கட்ட தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் வரும் 19-ம் தேதியோடு நிறைவடையும் வாக்குப்பதிகள் மொத்தமாக 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.இம்முறை ஆட்சியை பிடிக்க காங்கிரசும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜ.வும் தற்போது வரை சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் சிர்ஸாவில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது, இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும்.கடந்த தேர்தலில் நரேந்திர மோடி ஒரு பொய் உறுதி அளித்தார். அவர் அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவேன் என்று பொய் கூறினார். ஆனால் இப்போது நான் உங்களிடம் உறுதியளிக்கிறேன்,
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் 5 வருடங்களுக்குள் அனைவரது வங்கிகணக்கிலும் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் செலுத்துவோம் என்று கூறினார்.ஆளாளுக்கு லச்சக்கணக்கில் பணம் தருகிறேன் என்று தேர்தல் வந்தால் மட்டுமே புருடா விடுகிறார்கள் என்றும்,எங்களை இரக்கும் பிச்சைக்காரர்களாக கருதாமல் தகுந்த வேலை வாய்ப்பை ஏற்ப்படுத்தி தரவேண்டும் என்று தங்களுக்குள் சலசலக்கின்றனர்.