ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை – கழுத்தில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்..!
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற வளாகத்திற்குள் கழுத்தில் கருப்பு ரிப்பன் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுலுக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்
இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற வளாகத்திற்குள் கழுத்தில் கருப்பு ரிப்பன் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களும், தஞ்சையில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.