ராகுல் காந்திக்கு அமித்ஷா சவால்
- குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வதந்திகளை பரப்புகின்றனர் என்று குற்றச்சாட்டு
- எந்தவொரு நபரின் குடியுரிமையும் பறிக்கப்படும் என்று குறிப்பிடும் விதியை காட்டுங்கள் என்று ராகுல் காந்திக்கு அமித்ஷா சவால்
குடியுரிமை திருத்த சட்டத்திருத்தம் முஸ்லிம் சகோதர-சகோதரிகளின் குடியுரிமை பறிக்கப்படப் போகிறது என காங்கிரஸ் கட்சியும் மற்றப் பிற கட்சிகளும் தவறாக வழி நடத்துகின்றனர்.மேலும் சட்டத்திற்கு எதிராக வதந்திகளைப் பரப்புகின்றனர் மேலும் அனைவருக்கும், குறிப்பாக சிறுபான்மையினருக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் என்று அமித்ஷா தெரிவித்தார்.
அதில் அவர் கூறுகையில் எந்தவொரு நபருடைய குடியுரிமையும் பறிக்கப்படும் என்று குறிப்பிடுகின்ற ஏதாவது விதி இருந்தால் அதனை தயவுசெய்து முன்வைக்குமாறு ராகுல் காந்திக்கு நான் சவால் விடுகிறேன் என்று கூறினார்.மேலும் இந்தியா நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் சொல்ல விரும்புவது என்வென்றால் இந்த சட்டம் ஆனது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது அப்படி பறிக்கக் கூடிய எந்த ஒரு விதியும் இதில் இல்லை.
எதற்காக இந்த சட்டம் என்றால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தில் இருந்து இந்தியா வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதை தான் நோக்கமாகக் கொண்டுள்ளதே தவிர அது யாருடைய அது குடியுரிமையையும் பறிக்காது. மத துன்புறுத்தல்களிலிருந்து தப்பித்து ,அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அந்த நாடுகளை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்து உள்ளனர். தற்போது நடைமுறைக்கு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மூலமாக குடியுரிமையை வழங்குகிறோமே தவிர அதை யாரிடமிருந்தும் பறிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.ராகுல் காந்தியாகிய நீங்கள் இந்த சட்டத்திற்கு எதிராக நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். இந்திய நாட்டின் அமைதியை அழிக்க முயற்சி செய்யாதீர்கள். உங்களிடம் ஏதாவது உண்மைகள் இருக்குமேயானால் அதனை மக்களின் முன் வையுங்கள் என்று கூறினார்.