வன்முறைக்கு மத்தியில் ராகுல் காந்தியின் வருகை..! மணிப்பூர் பாஜக தலைவர் பாராட்டு..!

RahulGandhi - Manipur

வன்முறைக்கு மத்தியில் ராகுல் காந்தியின் வருகையை, மணிப்பூர் மாநில பாஜக தலைவர் சாரதா தேவி பாராட்டியுள்ளார்.

மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, மாநில அரசு சூரசந்த்பூரில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளது. இந்த சமயத்தில் முகாமில் உள்ள மக்கள்களை சந்திக்க ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றிருந்தார்.

அப்போது, இம்பால் விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக சூரசந்த்பூர் சென்ற ராகுல் காந்தியை விஷ்ணுபூர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி செல்வதற்கு சூரசந்த்பூர் செல்வதற்கு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இதன்பின் மாநில அரசு வழங்கிய ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி சூரசந்த்பூர் சென்று, பாதுகாப்பு முகாம்களில் தக்கவைக்கப்பட்டுள்ள கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், ராகுலின் வருகையை நான் பாராட்டுகிறேன் என்று மணிப்பூர் பாஜக தலைவர் சாரதா தேவி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் மாநிலத்திற்கு ராகுல் காந்தியின் வருகையை நான் பாராட்டுகிறேன். எவ்வாறாயினும், நிலைமையைத் தீர்த்து அமைதியை மீண்டும் கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்