டெல்லியை நெருங்கும் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை.! இன்னும் 4 தினங்கள் மட்டுமே…
வரும் டிசம்பர் 24ஆம் தேதி ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை டெல்லி சென்றடைய உள்ளது.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகம், கேரளா, மத்திய பிரதேசம் என கடந்து தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் யாத்திரை நடைபெற்று வருகிறது.
வரும் டிசம்பர் 24ஆம் தேதி தலைநகர் டெல்லியை அடைய இருக்கிறது ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை. தலைநகர் டெல்லிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை வரவேற்க பாதர்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பிரமாண்ட வரவேற்புக்கு காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கு ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையை மேற்கொள்கிறார். இந்த யாத்திரையில், திமுக எம்பி கனிமொழி மற்றும் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.