பீகாரில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் பிரியங்கா காந்திக்கு சொந்தமான இடத்திற்கு ராகுல் காந்தி சுற்றுலா சென்றிருந்தார் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் சிவானந்த் திவாரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 3 முறை தொடர்ந்து நிதிஷ் முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றார். இவரை தொடர்ந்து பாரதீய ஜனதா தலைவர்களான தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் பீகார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான் (Vikassheel Insaan Party),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (Hindustani Awam Morcha) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.பாஜக 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.ஆனால் ராஷ்ட்ரிய ஜனதாதளம் – காங்கிரஸ் – இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.இந்த கூட்டணி மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்று அழைக்கப்பட்டது.ராஷ்ட்ரிய ஜனதாதளம் 75 தொகுதிகளையும் காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் , இடதுசாரிகள் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் சிவானந்த் திவாரி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் 70 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.மூன்று நாட்கள் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ள பிரியங்கா காந்தி வரவே இல்லை.இங்கு முழுவீச்சில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் பிரியங்கா காந்திக்கு சொந்தமான இடத்திற்கு ராகுல் காந்தி சுற்றுலா சென்றிருந்தார். இதைப்போலத்தான் காங்கிரஸ் கட்சியும் செயல்படுகிறதா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…