ஒற்றுமை யாத்திரையில் முத்தம் கொடுத்த ராகுல் காந்தி.! பாஜக பிரமுகருக்கு பதிலடி கொடுத்த பெண் எம்எல்ஏ.!
ராகுல்காந்தி முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்ட டிவீட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக பெண் எம்எல்ஏ திவ்யா மதேர்னா பாஜக தொண்டருக்கு பதில் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் நடைபயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது ராஜாஸ்தான் மாநிலத்தில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடைப்பயணத்தின் போது, ராகுல் காந்தி, ராஜஸ்தான் பெண் எம்எல்ஏ திவ்யா மதேர்னாவுக்கு தலையில் முத்தம் கொடுத்திருப்பார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு, பாஜக தொண்டர் அருண் யாதவ் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கு சிறந்த கமெண்டை (caption) பதிவிடுங்கள் என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, எம்எல்ஏ திவ்யா மதேர்னா அந்த டிவீட்டிக்கு கீழே 7 பதில்களை பதிவிட்டு இருந்தார். மேலும் மற்றவர்கள் கமெண்ட் செய்த பதிவுகளையும் ரீடிவீட் செய்து இருந்தார்.
அவர் பதிவிடுகையில், மூத்த சகோதரர், பாதுகாவலர், தந்தை, மகள் என பல்வேறு பதில்களை பதிவிட்டுள்ளார் எம்எல்ஏ திவ்யா மதேர்னா.
அதில், மேலும், “இது உங்களுக்கு அவமானம். உங்களுக்கு ஒரு மகள், மனைவி, தாய் இருக்கலாம். இது போன்ற செயல்களை செய்வதை நிறுத்துங்கள். அரசியல் ரீதியாக குறிவைக்க சில சிறந்த வழிகளைக் கண்டறியவும்” என பதிவிட்டுள்ளார் எம்எல்ஏ திவ்யா மதேர்னா.
Caption 1 : बड़े भाई ,संरक्षक ,अभिभावक. https://t.co/PUauxO5yl5
— Divya Mahipal Maderna (@DivyaMaderna) November 23, 2022