கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாககாங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தலைமை மாற்றம் வேண்டும் என கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் பின்னணியில் பாஜக உள்ளது என்று ராகுல் காந்தி கூறியதாக கூறப்பட்டது. இதனால், ராகுலின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதைதொடர்ந்து, கடிதம் எழுதியதற்காகவே பாஜகவுடன் தொடர்பு என குற்றம்சாட்டுவதா..? 30 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட வெளியிட்டது கிடையாது என கபில் சிபில் தனது ட்விட்டரில் பதிவை பதிவிட்டார். இதற்கிடையில், குலாம் நபி ஆசாத் “ராகுல் காந்தி தனது கூற்றை நிரூபித்தால் நிரூபித்தால் பதவி விலக தயார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர்கள் என நான் கூறவில்லை என்று ராகுல் விளக்கமளித்தார். ராகுல் காந்தி விளக்கம் அளித்ததை தொடர்ந்து தொடர் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவை கபில் சிபில் நீக்கி உள்ளார்.
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…