ராகுல் காந்தியின் தலைமை காங்கிரஸ் கட்சிக்கு தேவை – ரந்தீப் சுர்ஜிவாலா
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அந்த கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது.
இதனால் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதன் பின் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்.நாட்டுக்காக தொடர்ந்து உழைக்க காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டுள்ளது தேர்தலில் கடுமையாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் .
ராகுல் காந்தி பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்.ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஒட்டுமொத்த காங்கிரஸ் செயற்குழுவும் நிராகரித்தது.
காங்கிரஸ் கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்கான திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் .ராகுல் காந்தியின் தலைமை காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுவதாக காரிய கமிட்டி முடிவு செய்யப்படும் . கட்சியை மாற்றியமைக்க ராகுல் காந்திக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கியது காங்கிரஸ் காரிய கமிட்டி என்று தெரிவித்துள்ளார்.