ராகுல் காந்தியின் ஜாமீன் நீட்டிப்பு.. மேல்முறையீடு மனு மே 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Default Image

ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம். 

குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். 2 சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து  மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார். ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் சூரத் நீஎதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.

இந்த நிலையில் மேல்முறையீடு மனு மீதான விசாரணையின்போது, அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் ஜாமீனை ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது சூரத் செஷன்ஸ் நீதிமன்றம். சூரத் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட் 30 நாள் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், அதை நீட்டித்தது சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.

மேலும், ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தொடர்பாக குஜராத் அரசு, மனுதாரர் பதிலளிக்க ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க சூரத் மாவட்ட நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இவ்வழக்கு முடியும் வரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிலுவையில் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம். அதன்படி, அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சூரத் நீதிமன்றத்தில் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்