ராகுல்காந்தி அணிந்தது ‘ஸ்வெட்டர்’ இல்லை ‘ரெயின் கோட்’ தான்..! பதிலளித்த காங்கிரஸ்.!
ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி அணிந்தது ஜாக்கெட் இல்லை ரெயின்கோட் என்று காங்கிரஸ் பதிலளித்துள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினர். பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு வந்துள்ளார். இந்த யாத்திரை தொடங்கியதில் இருந்து ராகுல் காந்தி வெள்ளை நிற டீ-ஷர்ட் அணிந்திருந்தார்.
ஆனால் இன்று முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தி வெள்ளை நிற டீ-ஷர்ட்க்கு மேல் கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து சென்றுள்ளார். இதனால் பலவித கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்து காங்கிரஸ் பதிலளித்துள்ளது.
ஜம்முவின் கதுவாவில் லேசாக மழைத் தூறியதால் அவர் ரெயின்கோட் அணிந்துள்ளார் என்றும் ஜாக்கெட் அணியவில்லை என்றும் கூறியுள்ளது. சிறிது நேரத்தில் லேசான தூறல் நின்ற பிறகு ராகுல் காந்தி ரெயின்கோட்டை கழட்டிவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தார்.
Wearing a black jacket in light drizzle, Shri @RahulGandhi ji resumed the Padayatra from Kathua in Jammu & Kashmir with huge crowds this morning. Shiv Sena leader MP Shri. @rautsanjay61 ji walking with Rahul Gandhi.#BharatJodoYatra pic.twitter.com/gYd6a3lHyQ
— Ramesh Sanapala (@RameshSanapala5) January 20, 2023