காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தமிழகம் வருகை… சொந்த தொகுதிக்கும் ஒரு விசிட்…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நீண்ட நீதி போராட்டத்திற்கு பிறகு மீண்டும் கேரள, மாநில வயநாடு தொகுதி எம்பியாக தனது பொறுப்பை மீட்டுள்ளார். இந்த நீதி போராட்டத்திற்கு பிறகு முதன் முறையாக தனது சொந்த தொகுதிக்கு ராகுல்காந்தி செல்ல உள்ளார்.
அவர் டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் இன்று தமிழகம் வரவுள்ளார். அதன் பிறகு அங்கிருக்கு ஊட்டி செல்கிறார். அங்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷை சந்திக்க உள்ளார். பின்னர் ஊட்டியில் நடைபெறும் சில நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு செல்கிறார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி. இவரை வரவேற்க தமிழகம் மற்றும் கேரளாவில் கட்சி தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025