வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: ராகுல்காந்தி எச்சரிக்கை!

வாக்காளர் பட்டியலில் மோசடி இருப்பதாக நாங்கள் கூறிய குற்றச்சாட்டை தெளிவாக ஒப்புக்கொள்வதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Aadhaar - Rahul Gandhi

டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும் தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் மோசடியை தடுக்கும் விதமாக, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.

அதன்படி, வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதாருடன் இணைக்கும் பணி தற்போதுள்ள சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது. மேலும் இந்த செயல்முறைக்காக UIDAI மற்றும் அதன் நிபுணர்களுக்கு இடையே தொழில்நுட்ப ஆலோசனைகள் விரைவில் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதனை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கவலைகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக  காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி எக்ஸ் தள பக்கத்தில், “இந்திய தேர்தல் ஆணையம் இன்று வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதாரை இணைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், வாக்காளர் பட்டியலில் மோசடி இருப்பதாக நாங்கள் கூறிய குற்றச்சாட்டை தெளிவாக ஒப்புக்கொள்வதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் இந்தியா கட்சிகள் வாக்காளர் பட்டியல்களில் அசாதாரணமாக அதிக சேர்த்தல்கள், எதிர்பாராத நீக்கங்கள் மற்றும் நகல் வாக்காளர் அடையாள அட்டை எண்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகின்றன. ஆதார் நகல் வாக்காளர் அடையாள அட்டை எண்களின் சிக்கலை தீர்க்கக்கூடும், ஆனால் ஏழ்மையான மற்றும் மிகவும் பின்தங்கிய மக்கள் ஆதாரை இணைப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

எந்தவொரு இந்தியரும் வாக்களிக்கும் உரிமையை இழக்காமல் இருப்பதை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும், மேலும் தனியுரிமை கவலைகள் தீர்க்கப்பட வேண்டும். இப்போது இந்திய தேர்தல் ஆணையம் பிரச்சனையை ஒப்புக்கொண்டுள்ளதால், மகாராஷ்டிரா 2024 சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களின் முழு வாக்காளர் புகைப்படப் பட்டியலையும் பகிரங்கமாகப் பகிர்வதன் மூலம் தொடங்கி, சேர்த்தல் மற்றும் நீக்குதல் பிரச்சினையையும் அது தீர்க்க வேண்டும் என்ற எனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்