கேரளாவில் தனது தொகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ராகுல் காந்தி!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இந்தியாவில் பல இடங்களில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக கேரளாவில் சுமார் 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 2.5 லட்சம் மக்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 77 பேர் இந்த வெள்ளத்தால் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
இந்த வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளானதில் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற தொகுதியான வயநாடும் ஒன்று அங்கு இன்று சென்ற ராகுல்காந்தி, அங்கு வெல்ல பாதிப்புகளை பார்வையிட்டார். மேலும், பாதிக்கப்பட்டுள்ள்ள மக்களிடம் ஆறுதல் கூறினார். அவர், ‘ நான் உங்கள் தொகுதி என்கிற முறையில், கேரளா முதல்வரிடமும், பிரதமரிடமும் நிவாரண உதவிகளை கேட்டுள்ளதாக’ மக்களிடம் தெரிவித்துள்ளார்.