தேவையற்ற செலவு செய்வதற்கு பதிலாக தடுப்பூசி, ஆக்ஸிஜன் சேவைகளில் கவனம் செலுத்த மோடி அரசுக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்..!
கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கொரோனா தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் மற்றும் பிற சுகாதார சேவைகளில் கவனம் செலுத்துமாறு அவர் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பி.ஆர் மற்றும் தேவையற்ற திட்டங்களுக்கு செலவு செய்வதற்கு பதிலாக தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் மற்றும் பிற சுகாதார சேவைகளில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். அடுத்து வரும் நாட்களில் இந்த நிலைமை மோசமடையக்கூடும். நிலைமையை சமாளிக்க நாடு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய நிலைமை தாங்க முடியாதது என தெரிவித்துள்ளார்.
सद्भाव से केंद्र सरकार से अपील है कि PR व अनावश्यक प्रॉजेक्ट पर खर्च करने की बजाए वैक्सीन, ऑक्सीजन व अन्य स्वास्थ्य सेवाओं पर ध्यान दें।
आने वाले दिनों में ये संकट और भी गहरायेगा। इससे निबटने के लिए देश को तैयार करना होगा।
वर्तमान दुर्दशा असहनीय है!
— Rahul Gandhi (@RahulGandhi) April 24, 2021
மத்திய விஸ்டா திட்டம், புதிய நாடாளுமன்றம் திட்டத்திற்கு கோடிகணக்கில் செலவு செய்வதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி இதை தெரிவித்துள்ள்ளார்.