ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி பயணம்..! பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்..!

RahulManipurVisit

காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் சூரசந்த்பூர் சென்றடைந்தார்.

மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, மாநில அரசு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளது. இந்த சமயத்தில் சூரசந்த்பூரில் நிவாரண முகாமில் உள்ள மக்கள் மற்றும் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்க ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றிருந்தார்.

அப்போது, இம்பால் விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக சூரசந்த்பூர் சென்ற ராகுல் காந்தியை விஷ்ணுபூர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். மணிப்பூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, ராகுல் காந்தி வாகனம் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருந்ததால், அவரது தனிப்பட்ட பாதுகாப்பை கவனத்தில் கொண்டு சாலை மார்க்கமாக செல்ல அனுமதி வழங்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி செல்வதற்கு சூரசந்த்பூர் செல்வதற்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், மாநில அரசு வழங்கிய ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி சூரசந்த்பூர் சென்றடைந்தார். அவருடன் உயர் போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சென்றனர். பாதுகாப்பு முகாம் சென்றடைந்த ராகுல் காந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்