Congress MP Rahul Gandhi [File Image]
சென்னை: புனே விபத்தில் 17 வயது சிறுவன் விடுவிக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி இன்று ஹரியானாவில் கடுமையாக விமர்சனம் செய்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ‘போர்ஷே டேகான்’ எனும் சொகுசு காரை அதிக வேகத்தில் ஒட்டி வந்த 17 வயது சிறுவன் , சாலையில் இருச்சக்கரத்தில் சென்று கொண்டு இருந்த தம்பதியை இடித்து ஏற்படுத்திய விபத்தில் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்கு பின்னர் அக்கம் பக்கத்தினரே சிறுவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வழக்கில் சிறுவனுக்கு 17 வயது என்பதால் அவருடைய தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவனுக்கு அடுத்த 15- 17 மணிநேரத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டான். விபத்து ஏற்படுத்தி 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தொழிலதிபரின் 17வயது மகனுக்கு ஜாமீன் கிடைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
17வயது சிறுவனுக்கு மகாராஷ்டிரா நீதிமன்றம் , போக்குவரத்து விதிமுறைகள் பற்றி கட்டுரை எழுத வேண்டும். போக்குவரத்து காவலருடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புனேவில் 17 வயது சிறுவன் மது அருந்தி போர்ஷை சொகுசு காரை ஓட்டி 2 பேரின் உயிரிழப்புக்கு காரணமாகி, பின்னர் கட்டுரை எழுதச்சொல்லி விடுவிக்கப்பட்டுவிட்டான். கட்டுரை எழுதினால் வழக்கில் இருந்து விடுப்படலாம் என்றால், பஸ், லாரி ஓட்டுனர்களிடம் கேளுங்கள். டெம்போ ஓட்டுனர்களிடம் கூட கேளுங்கள் அவர்களளும் கூட நன்றாக கட்டுரை எழுதுவார்கள் என்று விமர்சனம் செய்து பிரச்சார கூட்டத்தில் பேசினார் ராகுல் காந்தி.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…