மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பி வருகிறது.குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் முதலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தான் காஷ்மீருக்கு நிலைமையை அறியச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ,கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோரை ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் ராகுல் காந்தி இன்று காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மற்றும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் 9 பேர், காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…
சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…