காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவை தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே தேர்தலையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,கேரள காங்கிரஸ் கமிட்டியின் கோரிக்கையை ஏற்று, கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்று ஏ.கே.அந்தோணி கூறினார்.
இதனால் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதியாகி இருந்தது.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திர பிரதேச மாநிலம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.மேலும் தமிழகத்தில் விருப்பமனு அளிக்கப்பட்டது.அதேபோல இதற்கு தமிழகத்தில் போட்டியிட தமிழக காங்கிரஸ் கமிட்டி கே.எஸ்.அழகிரியும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் போட்டியிடுவதை காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது .காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர்பட்டியலில் வயநாட்டில் ராகுல் போட்டியிடுவது அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவை தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…