வயநாடு மக்களவை தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவை தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே தேர்தலையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,கேரள காங்கிரஸ் கமிட்டியின் கோரிக்கையை ஏற்று, கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்று ஏ.கே.அந்தோணி கூறினார்.இதனால் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதியாகி இருந்தது.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திர பிரதேச மாநிலம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.மேலும் தமிழகத்தில் விருப்பமனு அளிக்கப்பட்டது.அதேபோல இதற்கு தமிழகத்தில் போட்டியிட தமிழக காங்கிரஸ் கமிட்டி கே.எஸ்.அழகிரியும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் இதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில்,தென்னிந்திய மக்கள் மோடியால் தனித்துவிடப்பட்டதாக உணர்கிறேன் என்றும் அவர்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார்.
அதேபோல் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் போட்டியிடுவதை காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது .காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர்பட்டியலில் வயநாட்டில் ராகுல் போட்டியிடுவது அறிவிக்கப்பட்டது.அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவை தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.அவருடன் பிரியங்கா காந்தியும் செல்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.