ராகுல்காந்தி தகுதிநீக்கம்.! அரசு பங்களாவை காலி செய்ய ஒரு மாதம் காலக்கெடு.!
எம்பி பதிவியில் இருந்து ராகுல்காந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்தால் அவர் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக கூறி காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் , ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது.
ராகுல் காந்தி தகுதிநீக்கம் :
விதிகளின் படி, 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தண்டனை பெற்றால் மக்கள் பணிகளில் ஈடுபட முடியாது என்பதால், ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தற்போது தகுதிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
அரசு பங்களா :
சஸ்பென்ட் செய்யப்பட்டதால் தற்போது அவர் வசித்து வரும் அரசு பங்களாவில் குடியிருக்க முடியாது. அதன்படி, அவர் தற்போது டெல்லியில் துக்ளக் லேன் பகுதியில் வசித்து வரும் அரசு பங்களாவில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காலக்கெடு :
தகுதிநீக்க உத்தரவு பெறப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் ராகுல் காந்தி வீட்டை காலி செய்ய வேண்டும் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி அந்த அரசு பங்களாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.