வயநாடு தேர்தல் : தனது தங்கைக்காக குரல் கொடுக்கும் ராகுல் காந்தி.!
நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக பிரியங்கா காந்தி ஒலிப்பார் என ராகுல் காந்தி தனது சகோதரிக்கு ஆதரவாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் முன்னதாக நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. அவர் தற்போது உ.பி மாநிலம் ரேபரேலி தொகுதி எம்பியாக இருக்கிறார்.
வயநாடு இடைத்தேர்தல் மூலம் முதன் முறையாக தேர்தல் வாக்கு அரசியலில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவருக்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வயநாட்டில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், வயநாட்டில் உள்ள எனது மக்களிடம் கூறுகிறேன். இந்தத் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக எனது சகோதரி பிரியங்கா காந்தி குரல் கொடுக்க தயாராக இருக்கிறார்.
அவள் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதை விட அதிகமாக உங்களுக்கு சேவை செய்வாள். அவள் உங்கள் சகோதரி, உங்கள் மகள் மற்றும் உங்கள் குரலாக இருப்பார். வயநாட்டின் முன்னேற்றத்திற்கு அவள் உதவுவாள் என்று நான் நம்புகிறேன்.
உங்கள் அனைவரையும் வெளியே வந்து வாக்களித்து அவருக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிணைந்து மகத்தான வெற்றியை உறுதி செய்வோம். ” எனப் பதிவிட்டுள்ளார்.
I’m reaching out to my family in Wayanad—this election, my sister Priyanka Gandhi is ready to be your voice in Parliament.
She will be more than just a representative—she will be your sister, your daughter, and your advocate. I am confident she will help unlock Wayanad’s full…
— Rahul Gandhi (@RahulGandhi) November 13, 2024