இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.! 67 நாட்கள்.! 6,713 கிமீ பயணம்.!

Published by
மணிகண்டன்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தினார். கடந்த 2022 செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் கன்னிக்குமாரியில் தொடங்கிய இந்த யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு 2023 ஜனவரி மாதம் காஷ்மீர், ஸ்ரீநகரில் ஒற்றுமை யாத்திரை நிறைவு செய்யப்பட்டது.

இந்த யாத்திரையில் பாஜகவின் பிரிவினைவவாத மாத அரசியலுக்கு எதிராகவும், சமத்துவம், வேலைவாய்ப்பின்மை போன்ற சமூக பொருளாதார பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் முக்கிய நோக்கமாகக் கொண்டு யாத்திரை நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியில் உள்ள இந்துக்கள் அயோத்தி செல்ல உரிமை உள்ளது.! ஆனால்.? சசிதரூர் கருத்து.!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா , தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வழியாக சுமார் 4,000 கிலோ மீட்டர் அளவுக்கு பயணித்து காஷ்மீர் ஸ்ரீ நகரில் ஒற்றுமை யாத்திரை நிறைவடைந்தது

இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக கிழக்கிலிருந்து, மேற்கு நோக்கி தனது ஒற்றுமையா யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். கடந்த மே மாதம் முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் மணிப்பூரில் இருந்து இரண்டாம் கட்ட யாத்திரையை இன்று ராகுல் காந்தி தொடங்கினார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை எனும் பெயரில் தவ்பால் மாவட்டத்தில் ப்ரமாண்டமாக தொடக்க நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இந்த யாத்திரையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த யாத்திரையானது 15 மாநிலங்கள் வழியாக 6713 கிலோ மீட்டர் தூரம் வரை, 67 நாட்கள் நடைபெறுகிறது. செல்லும் வழியில் அந்தந்த மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

முன்னதாக மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் காங்கிரஸ் யாத்திரை தொடங்க திட்டமிட்டு இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி அங்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டது. இதனை அடுத்து தௌபால் மாவட்டத்தில் யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளது.

Recent Posts

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்! அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்! 

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்!

நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…

1 hour ago
ஜனவரி 10 இந்த 5 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! வானிலை மையம் தகவல்!ஜனவரி 10 இந்த 5 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! வானிலை மையம் தகவல்!

ஜனவரி 10 இந்த 5 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! வானிலை மையம் தகவல்!

சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…

1 hour ago
மீண்டும் தடுமாறிய இந்திய அணி! டி20 ஆட்டத்தை காண்பித்த ரிஷப் பன்ட்!மீண்டும் தடுமாறிய இந்திய அணி! டி20 ஆட்டத்தை காண்பித்த ரிஷப் பன்ட்!

மீண்டும் தடுமாறிய இந்திய அணி! டி20 ஆட்டத்தை காண்பித்த ரிஷப் பன்ட்!

சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…

1 hour ago

விண்வெளியில் ரோபோட்டிக் கரங்களின் செயல்பாடு! இஸ்ரோ படைத்த புதிய சாதனை!

ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…

2 hours ago

மாணவி பாலியல் விவகாரம் : “நான் ஏன் போராட வேண்டும்?” கனிமொழி எம்.பி கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…

2 hours ago

கடைசி டெஸ்ட் முடிந்த பிறகு ஓய்வா? மனம் திறந்த ரோஹித் சர்மா!

சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…

3 hours ago