எல்லை விவகாரத்தில் பிரதமரின் கருத்துகள் அண்டை நாடுகளுக்கு தான் பயனளிக்கும்.! ராகுல் காந்தி சாடல்.!
இந்திய எல்லை சீனாவால் ஆக்கிரமிக்கபடவில்லை. செயற்கைக்கோள் படம் உண்மையானது என பிரதமர் கூறினால் அது சீனாவிற்கு பயன் தரும் வகையில் அமைந்துவிடும் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய-சீன எல்லையான லடாக் விவகாரம் தற்போது பெரிய சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது. இது குறித்து இந்திய பிரதமர் மோடி கூறுகையில், ‘எந்த ஒரு இந்திய எல்லை பகுதியும் சீனாவினால் ஆக்கிரமிக்க படவில்லை.’ என மறுப்பு தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ பிரதமர் மோடி இந்திய-சீன எல்லை விவகாரம் குறித்து உண்மையான தகவல்களை நாட்டு மக்களுக்கு சொல்லுமாறு கேட்டு கொள்கிறோம். ‘ என தெரிவித்தார்.
மேலும், ‘ எந்த ஒரு இந்திய எல்லையும் சீனாவால் ஆக்கிரமிக்கபடவில்லை என்றால், செயற்கைக்கோளில் வெளியாகியுள்ள படங்கள் சீனாவிற்கு பயன்தரும் வகையில் உள்ளது.’ என அவர் குறிப்பிட்டார்
மேலும், ‘ இந்திய எல்லைகளை பாதுகாப்பது மத்திய அரசின் பொறுப்பு. லடாக்கின் தற்போதைய நிலமை குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் செயலாற்ற வேண்டும்.’ எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்திய எல்லை சீனாவால் ஆக்கிரமிக்கவில்லை என கூறினால் செயற்கைக்கோள் படம் உண்மையானது என நீங்கள் (பிரதமர் மோடி) கூறினால் அது சீனாவிற்கு பயன் தரும் வகையில் அமைந்துவிடும். எனவும், ராகுல் காந்தி தனது கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.