ஊரடங்கு மட்டுமே கொரோனாவை தடுக்காது.! ராகுல்காந்தி கருத்து.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று காணொளி மூலம் செய்திக்காயாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை முன்வைத்தார்.
அதில் அவர் பேசியதாவது , ‘ கொரோனாவிற்கான பரிசோதனைகள் அதிகளவு மேற்கொள்ளப்படவேண்டும். ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்திவிடாது. ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.’ எனவும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.