ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் – லாலு பிரசாத்
இன்னும் நேரம் இருக்கிறது, ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளலாம் என லாலு பிரசாத் யாதவ் பேட்டி.
பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதிலும் சரி, பாரத் ஜோடோவிலும் சரி சிறப்பாக செயல்பட்டார் ராகுல் காந்தி.
தாடியை ஷேவ் செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம், நீங்கள் முன்னரே திருமணம் செய்திருக்க வேண்டும், பரவாயில்லை இன்னும் நேரம் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளலாம். இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.