இம்பால் திரும்பினார் ராகுல் காந்தி!

rahul gandhi

மணிப்பூரில் காவல்துறை தடுத்து நிறுத்தியதை அடுத்து இம்பால் திரும்பினார் ராகுல் காந்தி.

மணிப்பூரில் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் சென்றிருந்தார். பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளது மணிப்பூர் அரசு. இந்த சமயத்தில் வன்முறையில் பாதித்து முகாமில் உள்ள மக்கள் மற்றும் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்க ராகுல் காந்தி மணிப்பூர் சென்றிருந்தார்.

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்தது. சூரசந்த்பூரில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க சென்று கொண்டிருந்தார் ராகுல் காந்தி. அப்போது, இம்பால் விமான நிலையத்தில் இருந்து சூரசந்த்பூர் சென்ற ராகுலை விஷ்ணுபூர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மணிப்பூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மணிப்பூரில் காவல்துறை தடுத்து நிறுத்தியதை அடுத்து இம்பால் திரும்பினார் ராகுல் காந்தி. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக, மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை காவல்துறை தடுத்து நிறுத்தியதையடுத்து இம்பால் திரும்பினார்

ராகுல் வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய ராகுல் காந்தி, கலவரம் நீடித்து வரும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது தான் முதன்மையானது. ஒற்றுமையாக இருப்பதே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்