உயிரிழந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்றடைந்த ராகுல்காந்தி ..!
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற போது, போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று மீண்டும் ஹத்ராஸ் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சென்றனர். ஆனால், டெல்லி-நொய்டா சாலையில் இருந்த போலீசார் இவர்களை தடுத்து நிறுத்திய உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி என கூறினர்.
பின்னர், ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சற்று நேரத்திற்கு முன் உயிரிழந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் சென்றனர்.