மணிப்பூர் மாநிலம் இம்பால் சென்றடைந்தார் ராகுல் காந்தி.!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் கலவரம் தொடர்பாக இம்பால் சென்றடைந்தார்.
மணிப்பூரில் கடந்த மே மாதம் வெடித்த கலவரம் தொடர்ந்து பல நாட்கள் ஆகியும் இன்னும் அங்கு பதற்றமான சூழ்நிலை தான் நிலவி வருகிறது. மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறை வெடித்ததில் கிட்டத்தட்ட 110 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் அரசு, பாதிக்கப்பட்ட மக்களை வன்முறை நடைபெற்ற இடங்களிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றி பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளது, மேலும் தேவையான உதவிகளையும் அரசு வழங்கிவருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் கலவரம் தொடர்பாக அங்கு நேரில் சென்று விசாரிக்க இம்பால் சென்றடைந்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி, மணிப்பூரில் இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் ராகுல் சந்தித்து உரையாட இருக்கிறார்.
Congress leader Rahul Gandhi reaches Imphal, Manipur
(Source: AICC) pic.twitter.com/VdAEhnfCV3
— ANI (@ANI) June 29, 2023